ரஜினிக்கு மலேசியாவில் பதவி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஜினிக்கு மலேசியாவில் பதவி?

ரஜினியின் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அப்போது அங்குள்ள முக்கிய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அவரை சந்தித்து பேசினர்.

படப்பிடிப்பின்போது மலேசிய மக்கள் ரஜினியிடம் மிகுந்த அன்பு காட்டினார்கள். படம் முடிந்து திரைக்கு வந்தபிறகும் ரஜினிக்கு அங்கிருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் மலேசிய அரசு ரஜினிக்கு சுற்றுலா துறை தூதர் பதவி தர எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஷாருக்கான் மலேசியா சுற்றுலா துறை தூதராக இருக்கிறார்.

அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லையாம். ரஜினிக்கு இப்பதவி தந்தால் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்று அந்நாட்டு அரசு எண்ணியிருக்கிறதாம்.

இதுகுறித்து அந்நாட்டு கலாச்சார துறை அமைச்சர் முகமது நஸ்ரி அப்துல் அசிஸ், ரஜினியை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பதவியை ரஜினி ஏற்பாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி உள்ளனர்.

.

மூலக்கதை