வெளிநாட்டு மண்ணில் 11 ஆண்டுக்கு பின் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெளிநாட்டு மண்ணில் 11 ஆண்டுக்கு பின் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணி

நாம்பென்: இந்தியா-கம்போடியா அணிகள் இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கம்போடிய தலைநகரான நாம்பென் நகரில் நேற்று இரவு நடந்தது. இதில் தொடக்கத்திலேயே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

36வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே கம்போடியாவின் குவான் கோல் அடிக்க, 1-1 என சமன் ஆனது.

முதல் பாதியில் 1-1 என சமனில் இருந்தது. 2வது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 2 கோல்கள் அடித்து அசத்தியது.

49வது நிமிடத்தில் ஜெசி லாபிக்குலா, 52வது நிமிடத்தில் சந்தோஷ் ஜெகன் கோல் அடித்தனர். கம்போடியா தரப்பில் வாதனாகா 62வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதன்பின்னர் கோல் எதுவும் விழாததால் 3-2 என இந்தியா வெற்றி பெற்றது. கடைசியாக 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.

அதன்பின்னர் சுமார் 11 ஆண்டுக்கு பின்  நேற்று இந்தியா வெளிநாட்டில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக வரும் 28ம் தேதி ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் இந்தியா மோத உள்ளது.


.

மூலக்கதை