ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் - ஜனாதிபதி

PARIS TAMIL  PARIS TAMIL
ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பயங்கரவாதத்தை எதிர்க்கும்  ஜனாதிபதி

நேற்றைய பிரித்தானிய பயங்கரவாத தாக்குதலின் பின்னர், தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதம் பிரான்ஸ் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 
 
நேற்று பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றபோது, செந்தனியின் Villepinte நகரில் இருந்த ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். பிரித்தானியாவுக்கு ஆதரவும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியையும் தெரிவித்த ஜனாதிபதி, ' பயங்கரவாதத்தின் தாக்கம் பிரான்ஸ் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல!' என குறிப்பிட்டார். 
 
மேலும், பயங்கரவாதம் எங்கள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இன்று பிரித்தானிய மக்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். இதற்கு நாமும் பொறுப்பு கூறவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை ஐரோப்பிய ரீதியாக செயற்படுத்தவேண்டும்! இது முழு ஐரோப்பா சம்மந்தப்பட்ட விடயம்!' என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை