லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்

தினகரன்  தினகரன்

லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இங்கிலாந்துக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தாக்குதலுக்கு இந்தியாவின் கவலையையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்தின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்குமென்றார். இது உலக ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஃபிரான்ஸ் அதிபர் ஃபிராக்கோயிஸ் ஹாலன்டே, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட தலைவர்களும் லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை