இரட்டை இலை சின்னத்தை முடக்கிய இந்திய தேர்தல் ஆணையம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இரட்டை இலை சின்னத்தை முடக்கிய இந்திய தேர்தல் ஆணையம்!

 இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், அது குறித்து ஐந்து முடிவுகளை தெரிவித்துள்ளது.

 
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகளிடம் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
 
1) இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. சின்னம் முடக்கப்படுகிறது.
 
2)ஒரு அணிகளும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது.
 
3) தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 85 சின்னங்களில் ஏதாவது மூன்று சின்னங்களை இரு அணிகளும் தங்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்த தகவலை இன்று காலை 10 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
 
4)அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு பெயரை, இரு அணிகளும் தேர்ந்தெடுத்து அது குறித்த தகவலை காலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
5)இரு தரப்பும் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை