பிரிட்டன் பார்லிமென்டை தாக்க முயற்சி கும்பல் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்

லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வந்த கும்பலை போலீசார் சுட்டுக் ெகான்றனர். பிரிட்டன் தலைநகர் லண்டனின் உள்பகுதியில் அமைந்துள்ளது வெஸ்ட்மின்ஸ்டர். இங்குதான் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஒரு மர்மகார் ஒன்று திடீரென தடை விதிக்கப்பட்ட பகுதியில் நுழைந்தது. இதையடுத்து சுதாரித்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அந்த காரின் டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குள் அந்த கார் நாடாளுமன்ற வளாகத்தின் காம்பவுண்டு சுவரில் மோதியது.இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் மூன்று நபர்கள் உள்ளே வெறி பிடித்தாற்போல் ஓடினர். அவர்களில் ஒருவரின் கையில் கத்தி இருந்தது. அவர்கள் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருந்ததை உணர்ந்த போலீசார், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தை சுற்றிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சி நடந்தபோது, பார்லிமென்ட்டில் எம்பிக்கள் இருந்தனர். அவர்களை பாதுகாக்க உடனே கதவுகள் பூட்டப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் பிரிட்டனில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை