ஒப்பந்த வீரர்கள் பட்டியல் அறிவிப்பு ஜடேஜா, புஜாரா, விஜய் ஏ கிரேடுக்கு புரமோஷன்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : கிரிக்கெட் வாரியம் சார்பில் 2017-18க்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் ஏ கிரேடுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சுரேஷ் ரெய்னா சி பிரிவில் கூட இடம் பெறவில்லை. ஏ, பி, சி என மூன்று பிரிவுகளுக்கான ஒப்பந்தத் தொகையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ கிரேடில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு தலா ரூ.2 கோடி, பி கிரேடு வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி மற்றும் சி பிரிவினருக்கு தலா ரூ.50 லட்சம் கிடைக்கும். போட்டிகளுக்கான ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். மூத்த வீரர்கள் ஹர்பஜன், கம்பீரும் பட்டியலில் இல்லை. ஏ கிரேடு: கோஹ்லி, டோனி, அஷ்வின், ரகானே, புஜாரா, ஜடேஜா, விஜய். பி கிரேடு: ரோகித், கே.எல்.ராகுல், புவனேஷ்வர், ஷமி, இஷாந்த், உமேஷ், சாஹா, பூம்ரா, யுவராஜ்.சி கிரேடு: தவான், ராயுடு, மிஷ்ரா, மணிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, ஆசிஷ் நெஹ்ரா, கேதார் ஜாதவ், யஜுவேந்திர சாஹல், பார்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், ரிஷப் பன்ட்.

மூலக்கதை