டோக்கியோவில் நடைபெறும் நூதன கொள்ளை: வீடுகளில் ஐஸ் கிரீம், சாக்லெட் திருடும் கொள்ளையன்

தினகரன்  தினகரன்

டோக்கியோ: டோக்கியோவில், 4 வருடங்களாக நூதன திருட்டில் ஈடுபட்டுவரும் கொள்ளையன் போலீசில் பிடிபட்டுள்ளான். வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டிலிருக்கும் விலையுர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வது வழக்கம். ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா(51) என்ற கொள்ளையன் வித்தியாசமானவன். இத்திருடன், பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதில்லை. அதற்கு மாறாக குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடினான். சமீபத்தில் அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கொள்ளையடித்து வருவதாக கூறியுள்ளான். மேலும், இது போன்று 40க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

மூலக்கதை