குற்றச்சாட்டினால் பதவிவிலகிய உள்துறை அமைச்சர் (காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
குற்றச்சாட்டினால் பதவிவிலகிய உள்துறை அமைச்சர் (காணொளி)

பிரான்சின் உள்துறை அமைச்சராக இரந்த புரூனோ லு ரூ வின் மீது, அவரின் இரண்டு மகள்களிற்கும் போலித் தொழில் ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் பெற்றுக் கொடுத்ததான குற்றச்சாட்டில், பிரான்சின் பொரளாதார நீதிமன்றம் ஒரு வழக்கினைப் பதிவு செய்துள்ளது.
 
இதனால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 18h00 மணியளவில், ஜனாதிபதி பிரோன்சுவா ஒல்லோந்திடம், உள்துறை அமைச்சர் புரூனோ லு ரூ, தனது பதவி விலகல் கடிதத்தினைச் சமர்ப்பித்துள்ளார்.
 
 
"அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமைகளில் முக்கியமானது ஒன்றாகும். அதனால் நான் பதவி விலகுவதே பொருத்தமானது" என புரூனோ லு ரூ தெரிவித்தள்ளார்.
 
 
இன்று காலை மத்தியாஸ் பெக்ல் (Matthias Felk) புதிய உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இவர் பெனுவா அமோனின் பிரச்சாரப் பிரிவின் பொறுப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை