மின்னணு சாதனங்களை விமானத்தில் கையில் கொண்டு வர 6 நாட்டு பயணிகளுக்கு இங்கிலாந்து தடை

தினகரன்  தினகரன்

லண்டன்: லேப்டாப், ஐபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வர 8 நாடுகளின் பயணிகளுக்கு அமெரிக்க விதித்த தடையை தொடர்ந்து இங்கிலாந்தும் 6 நாட்டு பயணிகளுக்கு இத்தகைய தடையை விதித்துள்ளது. துருக்கி, லெபனான், ஜோர்டன், எகிப்து, துனிசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய 6 நாடுகள் இங்கிலாந்து விதித்துள்ள தடை பட்டியலில் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் மடிக்கணினி, DVD பிளேயர், ஐபேட், கேமராக்கள் மற்றும் வீடியோகேம் சாதனங்களை கைசுமையாக விமானங்களில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சூட்கேஸ் உள்ளிட்ட மூடப்பட்ட உடமைகளில் வைத்து எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கெய்ரோவைச் சேர்ந்த பயணி ஒருவர் பேசுகையில், இதுபோன்ற அர்த்தமற்ற தடைகளின் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து வி்ட முடியாது என்றார். இத்தகைய தடைகள் முஸ்லீம் நாடுகள் மீது இவர்கள் கொண்டுள்ள எண்ணத்தையே பிரதிபலிப்பதாக சாடினார். இந்த தடைகளை விதித்ததன் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தடுத்து விட முடியுமா என்ன என்று வினவினார். எனினும் விமான பயணத்தின் போது மருத்துவம் சார்ந்த பொருட்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து செல்ல, தடை ஏதுமில்லை. உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

மூலக்கதை