பொதுமக்கள் சட்டங்களும் உரிமைகளும் - உருவான நாள்!

PARIS TAMIL  PARIS TAMIL
பொதுமக்கள் சட்டங்களும் உரிமைகளும்  உருவான நாள்!

பிரான்சின் பொதுமக்களிற்கான சட்டங்களையும், உரிமைகளையும் நிர்ணயிக்கும் Code Civil, முதன் முதலாக மாவீரன் நெப்போலியனால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் இன்றாகும்.
 
 
1804 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 21ம் திகதியே பிரான்சிற்கான பொதுமக்கள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் உரிமைகள், சொத்துரிமைகள், உரிமைகள் போன்ற அடிப்படை மனித உரிமைகளைக் கருவாகக் கொண்டு, 30 பிரிவுகளுடன் இந்தச் சட்டங்கள இயற்றப்பட்டன. 560 பக்கங்களை இந்த Code Civil கொண்டிருந்தது.
 
இன்று நடைமுறையில் இருக்கும், Code Civil ஆனது, பல முறை மாற்றங்களிற்கு உள்ளாக்கப்பட்டது. ஆனாலும் மாவீரன் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட Code Civil இன் அடிப்படை மாறமலேயே, அதனை அடிப்படையாகக் கொண்டே, சகல மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
 

மூலக்கதை