ஊழலிற்குள் சிக்கிய உள்துறை அமைச்சர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஊழலிற்குள் சிக்கிய உள்துறை அமைச்சர்!!

பிரான்சில், போலி தொழில் உடன்படிக்கைகள் மூலம், பிள்ளைகளிற்கும் மனைவிற்கும், ஊதியம் வழங்குவதென்பதுஈ அரசியல்வாதிகளிற்குச் சாதாரண நடவடிக்கையாகி விட்டதுபோலும். பிரோன்சுவா பியோன், மற்றும் மரின் லூப்பென் ஆகியோர், தூக்கமின்றி வழக்குகளையும் விசாரணைகளையும் சந்தித்து வரும் நிலையில், பிரான்சின் உள்துறை அமைச்சர் புரூனோ லூ ரூவும் ( Bruno Le Roux) சிக்கலிற்கு உள்ளாகி உள்ளார்.
 
2009 முதல் 2016ஆம் ஆண்டு வரை, பாராளுமன்ற உதவியாளர்களாக இவரது இரணடு மகள்களும் ஊதியம் பெற்றுள்ளனர். ஆனால் இது போலியான தொழில் உடன்படிக்கை எனவும், அவர்கள் அப்படியான வேலைகள் எதனையும் செய்திருக்கவில்லை எனவும், பிரான்சின் தேசியப் பொருளாதார நீதிமன்றமான PNF (parquet national financier)  வழக்குத் தொடுத்தள்ளது. அதற்கான விளக்கம் அளிப்பதற்காக, பிரதமர் பேர்னார் காசநெவ், இவரை இன்று காலை மந்திரிகள் இல்லமான Hôtel Matignon இற்கு அழைத்துள்ளார்.
 
உடனடியாக வலது சாரிக்கட்சிகள், உள்துறை அமைச்சர் இராஜினாமான செய்யவேண்டும் என்ற கோசங்களை எழுப்பத் தொடங்கி உள்ளார்கள்.
 

மூலக்கதை