பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விரைவில் விண்வெளி செல்லவுள்ளார்

தினகரன்  தினகரன்

லண்டன்: பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இவ்வருடம் விண்வெளிக்கு செல்லவுள்ளார். இவர் லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்தவர் ஆவார். வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர். இவர்களில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் ஒருவர் ஆவார். இத்தகவலை ஐ.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இதை அவர் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை, விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற எனது ஆசையை தீர்த்து வைப்பவர் யார் என்ற தவிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. வெர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்டு பிரான்சன் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை