தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்

PARIS TAMIL  PARIS TAMIL
தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்

 நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட், நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரியும் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
 
நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க, நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நடிகர் தனுஷ் மதுரை, ஐகோர்ட் கிளையில் நேரில் ஆஜரானார். தொடர்ந்து அரசு மருத்துவர் முன்னிலையில் தனியறை ஒன்றில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
 
இந்நிலையில் இன்று (மார்ச்-20ல்) கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை மார்ச்-27 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை