சிவகார்த்திகேயன், அனிருத்தை கலாய்த்த சதீஷ்

PARIS TAMIL  PARIS TAMIL
சிவகார்த்திகேயன், அனிருத்தை கலாய்த்த சதீஷ்

 தற்போதைய காமெடியன்கள் சினிமாவில் ஹீரோக்களை கலாய்ப்பதோடு நின்று விடுவதில்லை, திரைக்கு வெளியேயும் சந்தடி சாக்கில் அவ்வப்போது கலாய்த்து வருகிறார்கள். அந்தவகையில், சிவகார்த்திகேயனுடன் மெரினா, எதிர்நீச்சல், மான்கராத்தே, ரெமோ தற்போது வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்தவரான சதீஷ், சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அவரது பர்பாமென்ஸ் குறித்து அவ்வப்போது தனது டுவிட்டரில் ஜாலியாக கலாய்த்து வருகிறார்.

 
 
இந்தநிலையில், தற்போது சிவகார்த்திகேயன், அனிருத் ஆகிய இருவருக்கும் பிரைட் ஆப் தமிழ்நாடு என்றொரு விருது கிடைத்திருக்கிறது. அதையடுத்து, வாழ்த்துக்கள் நண்பர்களே என்று கூறியுள்ள சதீஷ், அந்த விருது விழாவிற்கு அவர்கள் இருவருமே வேஷ்டி சட்டை அணிந்து சென்றதை குறிப்பிட்டு, விருது விழா ஏதேனும் கல்யாண மண்டபத்தில் நடந்ததோ என்று கேட்டு அவர்களை தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார் சதீஷ்.

மூலக்கதை