பிரட் லீ சாதனையை முறியடித்த நாதன் லியான்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரட் லீ சாதனையை முறியடித்த நாதன் லியான்!

 ஆஸ்திரேலியா வீரர் நாதன் லியோன் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் 8 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம், முன்னாள் ஆஸ்திரேலியா வேக பந்து வீச்சாளர் பிரட் லீ-யின் சாதனையை முறியடித்து இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுள்ளார்.

 
இந்தியாவிற்கு எதிராக ஏற்கனவே பிரட் லீ 53 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதுவே ஒரு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகளை விழ்த்திய சாதனையாக இருந்தது. தற்போது லியோன் 58 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
 
இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், 8 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் லியானை சாரும். இதற்கு முன்னர், சென்னையில் 1975 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ், ஏழு விக்கெடுகள் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.
 
சுழற்பந்து வீச்சாளரான லியோன் புஜாரா, விராத் கோலி, ரஹானே, அஸ்வின், ரித்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். லியானின் அபார பந்து வீச்சால், இந்திய அணி 189 ரன்களுக்கு சுருண்டது.

மூலக்கதை