187 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக லண்டன் போலீசில் பெண் கமிஷனர் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
187 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக லண்டன் போலீசில் பெண் கமிஷனர் நியமனம்

லண்டன்- உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசில் முதன்முறையாக கிரசிடா டிக் என்ற பெண் அதிகாரி, கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் லண்டன் காவல்துறை 187 ஆண்டுகால வரலாற்றை கொண்டது.

ஸ்காட்லாந்து யார்டு என புகழ் பெற்ற இந்த மெட்ரோ நகர காவல் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   இங்கிலாந்து அரசின் உள்துறை செயலரின் பரிந்துரையின்பேரில், கிரசிடா டிக்கை, ராணி எலிசபத் நியமனம் செய்துள்ளார். கிரசிடா டிக்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில், ‘‘187 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக பெண் கமிஷனர் பொறுப்பேற்க உள்ளார். கிரசிடா டிக் வலிமை வாய்ந்த காவல்துறை அதிகாரியாக செயல்படுவார்.

நீண்ட அனுபவம் கொண்ட அவர் சிறப்பான பணியை வழங்குவார்’’ என்றார்.

.

மூலக்கதை