ஏப்ரல் 3ல் மார்க்கம் தோன்ஹில் – மீண்டும் தேர்தல்!

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஏப்ரல் 3ல் மார்க்கம் தோன்ஹில் – மீண்டும் தேர்தல்!

இங்கு லிபரல் கட்சி சார்பில் யுனித்தா நாதன் அவர்களும், பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றிய Mary NGஆகியோர் போட்டியிடுவதற்கு முன் வந்துள்ளனர்.

இவர்களுள் யார் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பதை முதலில் கட்சி தீர்மானிக்கும் அல்லது உட்கட்சித்தேர்தல் தீர்மாணிக்கும்.

இதே வேளை கொன்சவேட்டிவ் வேட்பாளராக திரு. தியோ அன்ரனியோடு யோ டானியல் போட்டியிடுகின்றார். இவர்கள் இருவருள் யார் போட்டியிடுவது என உள்கட்சித்தேர்தலில் தீர்மானிப்பார்கள் அல்லது கட்சி தீர்மானிக்கும்.

இவர்களோடு NDP கட்சி சார்பில் Gregory Hines போட்டியிடுகின்றார் எனவும் தெரிய வருகின்றது. 2015 Oct 15ல் நடைபெற்ற தேர்தலில் NDP சார்பில் செந்தி செல்லையா போட்டியிட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.

ஏப்ரல் 03-2017 அன்று முன்னாள் பிரதமர் Stephen Harper ன் இடமான Calgary Heritage, முன்னாள் அமைச்சர் Jason Kennyன் இடமான Clagary Midnapore மொன்றியலில் அமைச்சர் Stephen Dion இடமான  Saint Laurentலும், காலஞ்சென்ற Muuril Belanger இடமான Ottawa Vanier   இவற்றோடு திரு. ஜோன் மைக்கலம் அவர்களின் இடமான Markham Thonhill லும் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன.

 

 

மூலக்கதை