பரமேஸ்வருக்கு எதிரான மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்

பெங்களூரு: கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் லாபம் தரும் இரட்டை பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெங்களூருவை சேர்ந்த சசிதர் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் பரமேஸ்வர், அரசு மானியம் பெற்று நடந்து வரும் கல்லூரி ஒன்றின் தலைவராக இருக்கிறார். நமது சட்ட விதிமுறைகளின்படி ஒருவர் லாபம் தரும் இரட்டை பதவிகளில் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பதவியை பறிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அம்மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்ய தொடங்கியதும், தலைமை நீதிபதி இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல, ஆகவே மனுவை வாபஸ் பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார். தலைமை நீதிபதியின் உத்தரவை ஏற்று வாபஸ் பெற்றார். இதன் மூலம் பெரிய கண்டத்தில் இருந்து பரமேஸ்வர் தப்பியுள்ளார்.

மூலக்கதை