ஆளில்லா கிராசிங் குறித்து துணை கலெக்டர் ஆய்வு

தினகரன்  தினகரன்

தங்கவயல்:  தங்கவயலில் ஆளில்லா கிராசிங்க் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  மாவட்ட கலெக்டர் உத்தரவின் ேபரில் துணை கலெக்டர் மஞ்சுநாத்  ஆய்வு மேற்கொண்டார். கோலார் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள திரிலோக் சந்திரா தங்கவயல் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு துணை கலெக்டர் மஞ்சுநாத்திற்கு உத்தரவிட்டிருந்தார். உத்தரவின் பேரில் நேற்று துணை கலெக்டர் மஞ்சுநாத், தாசில்தார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பெமல், சாம்பியன், சின்னுகோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இதுகுறித்து மஞ்சுநாத் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தில் ஆளில்லா கிராசிங்கை பள்ளி வாகனம் ஒன்று கடந்த ேபாது வேகமாக வந்த ரயில் மோதி  பல குழந்தைகள் இறந்தன. இந்த சம்பவம் தங்கவயலிலும் நடைபெற கூடாது என்பதற்காக தங்கவயலில் ஆளில்லா கிராசிங் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆய்வு தங்கவயல் பகுதி முழுவதும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சேகரிக்கப்படும் தகவல் குறித்து மாவட்ட கலெக்டருக்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையின் நோக்கமே தங்கவயலில் ஆளில்லா கிராசிங்கை அகற்றுவது ஆகும். 

மூலக்கதை