தமிழ் படத்துக்கு கவுரவம்

தினமலர்  தினமலர்
தமிழ் படத்துக்கு கவுரவம்

இப்போது வரும் தமிழ் திரைப்படங்கள், தேசிய அளவில் ஒரு விருது பெறுவதே அரிதாகி விட்டது. ஆனால், கனவு வாரியம் என்ற படம், சர்வதேச அளவிலான, ஏழு விருதுகளையும், 15 கவுரவ விருதுகளையும் பெற்று, இந்திய திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இது தவிர, ஜுராசிக் பார்க், கிளாடியேட்டர், ஸ்டார் வார்ஸ் படங்களைப் போல், கவுரவமிக்க, 'ரெமி' விருதும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளதாம். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தில், தற்போதைய நகரமயமாக்கலிலும், வீடியோ கேம் மோகத்திலும், மறைந்து போய் விட்ட, கிராமிய விளையாட்டுக்களை மையப்படுத்தி, கல்லா மண்ணா என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சியில், குழந்தைகளை நடிக்க வைத்து அசத்தியுள்ளனர்.

மூலக்கதை