எம்.எல்.ஏ., தியாகராஜன்

தினமலர்  தினமலர்
எம்.எல்.ஏ., தியாகராஜன்

படத்தயாரிப்பு, தொழில் என, பிசியாக இருக்கும் தியாகராஜன், முக்கியமான கேரக்டர் கிடைத்தால் மட்டுமே, நடிக்க சம்மதிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,வாக நடித்துள்ளார் தியாகராஜன். இந்த கதையைக் கேட்டதுமே நடிக்க சம்மதித்தாராம். எதிரியை அடித்து, நொறுக்கி வசனம் பேசுவதை விட, மூளையை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக யோசித்து முடிவு எடுக்கும் வில்லனாக, இதில் பின்னி பெடலெடுத்துள்ளாராம். இந்த படத்தை பார்த்தப் பின், 'அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் இருப்பரா' என, பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படும்' என்கிறது படக்குழு.

மூலக்கதை