கிம் ஜாங் நம் கொலையில் வடகொரிய தூதரக அதிகாரிக்கு தொடர்பு

தினகரன்  தினகரன்

கோலாலம்பூர்:வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் சில பெண்களால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிம் ஜாங் நம் கொலையில் மலேசியாவில் உள்ள வடகொரிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஹயான் க்வாங் சாங், வடகொரிய ஏர்லைன்ஸ் ஊழியர் கிம் யூகே ஆகியோர் உட்பட 5 வடகொரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று மலேசிய காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவதற்காக அனுமதி கேட்டு வடகொரிய தூதருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. வடகொரிய தூதரகம் இதற்கு ஒத்துழைப்பு தரும் என்றும், விரைவில் விசாரணைக்கு அனுமதிக்கும் என்றும் நம்புகிறோம். அனுமதி மறுக்கும்பட்சத்தில், மலேசியாவில் சொந்த நாட்டிற்கு சென்ற அவர்கள் இருவரும், திரும்ப வருவதற்கு கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை