அலட்சியத்தால் செவிலியர் மரணம் எய்ம்ஸ் மூத்த மருத்துவர் பணி நீக்கம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் மரணம் அடைந்த விவகாரத்தில் சீனியர் டாக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த 4ம் ேததி 28 வயதான எய்ம்ஸில் பணிபுரியும் நர்ஸ் ரஜ்பீர் கவுர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. மாரடைப்பால் கவுர் மரணமடைந்தார். அவரது குழந்தையும் இறந்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் இரு உயிர்கள் பலியானதாக கூறி செவிலியர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். மூன்று உள்ளுறை மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ரெசின்ட் டாக்டர்களின் போராட்டம் காரணமாக சஸ்பெண்ட் ரத்தானது. நர்ஸ் இறந்த  சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட  உயர்மட்ட விசாரணை குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. மூத்த உள்ளுறை மருத்துவரின்( மயக்கவியல்) அலட்சியம் காரணமாக இது நடைபெற்றுள்ளது. ஓரு மணி நேரம் தாமதமாக அறுவைசிகிச்சை அறைக்கு வந்துள்ளார். அவர் வருவதற்குள், மயக்க மருந்து கொடுக்காமலே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  மூத்த உள்ளுறை மருத்துவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். மகளிர், மகப்பேறு மருத்துவர் மூத்த உள்ளுறை மருத்துவரின் பணி அதிருப்தி குறித்து அவரது சர்வீஸ் ஆவணங்களில் பதியப்படும். 3 ஆண்டு உள்ளுறை பயிற்சி முடித்தபிறகு அவருக்கு எய்ம்ஸில் வேலை கிடைக்காது. ஜூனியர் ரெசிடென்ட் மருத்துவருக்கு ( மயக்கவியல்) எச்சரிக்கை தரப்படும். மற்றொரு மகப்பேறு மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

மூலக்கதை