தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஹபீஸ் சயீத்துக்கு வீட்டு காவல் ஏன்? லாகூர் உயர் நீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்

லாகூர்: தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் லாகூர் உயர்நீதிமன்றம், பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதல், பதன்கோட் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் ஜமாமற்றும் அவரது இயக்கத் தலைவர்கள் மாலிக் சபார் இக்பால், அப்துர் ரகுமான் அபிட், குவாசி காசிப் உசேன், அப்துல்லா உபைத் ஆகியோரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவில் வைக்க பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.இந்த உத்தரவை எதிர்த்து ஹபீஸ் சயீத் உள்பட  5 பேரும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்தார் முகமது ஷமிம்கான் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி ஹபீஸ் சயீத் உள்பட 5 பேரை வீட்டுக்காவலில் வைத்தது ஏன் என்று பஞ்சாப் மாகாண அரசு மார்ச் 7க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.ப்ளஸ்: மும்பை தாக்குதலில் அமெரிக்கர்களும் பலியானதால் ஹபீஸ் சயீத்தை பிடித்துக் கொடுத்தால் ₹66 கோடி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மூலக்கதை