மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் மீது துப்பாக்கிச்சூடு!

PARIS TAMIL  PARIS TAMIL
மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் மீது துப்பாக்கிச்சூடு!

 காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று இரவு 7.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
காயமடைந்த மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர் விமலராஜ் நேஷன் என்பவர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 

மூலக்கதை