பிரெஞ்சு காவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பித்த கடத்தல் காரன்! - பரிசில் சம்பவம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சு காவல்துறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பித்த கடத்தல் காரன்!  பரிசில் சம்பவம்!!

காவல்துறை அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கடத்தல்காரன் ஒருவன் தப்பித்துள்ளான். பரிசில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, பரிசின் 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  Val-de-Marne ஐச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கஞ்சா கடத்தல் கொள்ளையர்களின் குழு ஒன்றை தேடி வந்துள்ளார். பரிசின் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குற்றவாளியை பிடிக்கும் நோக்கியில் உள் நுழைந்ததாகவும், ஆனால் அதிகாரியை நோக்கி கடத்தல்காரன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஏனைய காவல்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக அறிய முடிகிறது. 
 
ஆனால் சிறிது நேரத்துக்குள்ளாகவே குறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்து 70 ஆயிரம் யூரோக்கள் ரொக்கப்பணம் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியை நோக்கி இருதடவைகள் சுட்டதாகவும், அதிஷ்ட்டவசமாக அதிகாரிக்கு பெரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, மேற்குறிப்பிட்ட கஞ்சா கடத்தில் குழுவைச் சேர்ந்த 6 பேரை Pantin (Seine-Saint-Denis) இல் வைத்து Val-de-Marne அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரே சமயத்தில் இரு வேறு இடங்களில் ஒரே அமைப்பைச் சேர்ந்த 7 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை