இந்தியர்களுக்கு அதிகமாக வேலை அளிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
இந்தியர்களுக்கு அதிகமாக வேலை அளிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதம்

28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் அமைப்பை சேர்ந்த பாராளுமன்ற குழு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதிகள் நட்புமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். டெல்லியில் மத்திய மந்திரிகள் மற்றும் பல துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளை சந்திக்கும் அவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியா – ஐரோப்பிய யூனியனுக்கு இடையே நீண்டகாலமாக தீராத விவகாரமாக கிடப்பில் போடப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள டேவிட் மெக் அலிஸ்டர், இந்தியாவை சேர்ந்தவர்கள் எங்கள் நாடுகளில் பணியாற்ற திறந்தமனதுடன் அனுமதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் திறமைசாலிகள், கடும் கிராக்கியாக இருக்கும் இவர்களுக்காக ஐரோப்பா திறந்தே இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் இல்லை என்றால் எங்கள் நாட்டில் இந்த துறை வெற்றிகரமாக வளர்ந்து இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மூலக்கதை