‛சாமி-2வில் த்ரிஷா நடிப்பது உறுதியானது

தினமலர்  தினமலர்
‛சாமி2வில் த்ரிஷா நடிப்பது உறுதியானது

விக்ரம் - த்ரிஷா ஜோடியாக நடிக்க ஹரி இயக்கத்தில் 14 வருடங்களுக்கு முன்பு 2003ம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'சாமி'. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விக்ரம் மிகப் பெரும் கமர்ஷியல் ஹீரோவாகவும் மாறினார். த்ரிஷாவுக்கும் முதல் பெரிய வெற்றிப் படமாக அந்தப் படம் அமைந்தது.

அந்தப் படத்திற்குப் பின் விக்ரம் - ஹரி கூட்டணி 'அருள்' படத்தில் மீண்டும் இணைந்தார்கள். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. அதன் பின் விக்ரம் - ஹரி கூட்டணி மீண்டும் இணையவேயில்லை. சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விக்ரம் - ஹரி இணையும் படமாக 'சாமி 2' படம் ஆரம்பமாக உள்ளது.

இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது பற்றி த்ரிஷா இன்று டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

“என்னுடைய முதல் சூப்பர்ஸ்டார் ஹீரோ விக்ரம் மற்றும் ஹரி சார் மூன்றாவது முறையாக இணையும் படம், ஷிபி தமீன் தயாரிக்க, சிறந்த திறமைசாலி ஹாரிஸ்..நாங்கள் மீண்டும் இணைகிறோம்.

இதை ஒரு வட்டம் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும், எங்கு ஆரம்பித்தேனோ மீண்டும் அங்கேயே திரும்ப செல்கிறேன். 'சாமி 2' படத்தில் நானும் இணைந்துள்ளேன். டபுள் ஆக்ஷன், டபுள் காதல், த்ரிஷா 62, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

'சாமி 2' படத்தில் த்ரிஷா நடிப்பதற்கு அவருடைய நெருங்கிய நண்பரான ஆர்யா உட்பல பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

மூலக்கதை