பாகுபலி 2 - ஷாருக்கான் நடிக்கவில்லை

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
பாகுபலி 2  ஷாருக்கான் நடிக்கவில்லை

பாகுபலி இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்க்ளூசன்ஸ் படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக வந்த செய்தியை தயாரிப்பு தரப்பு  மறுத்துள்ளது.

  பிரமாண்ட வெற்றி பெற்ற பாகுபலியின் இரண்டாம் பாகம் பரபரப்பாக தயாராகி வருகிறது. பாகுபலியின் சாதனையை  முறியடிப்பதுதான் இரண்டாம் பாகத்தின் இலக்கு.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜுடன் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கானும் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் என்று பல நாள்களாக செய்தி அடிபட்டது. அது தவறான செய்தி.   ஷாருக்கான் நடித்தால் யார் வேண்டாம் என்பார்கள்.

சோகம் என்னவென்றால் அவர் எங்கள் படத்தில் நடிக்கவில்லை என்று பாகுபலியின் தயாரிப்பாளர்கள், கொஞ்சம் நக்கலாக குறிப்பிட்டுள்ளனர்.

.

மூலக்கதை