ரஜினியை பின்தொடரும் சிவகார்த்திகேயன்

PARIS TAMIL  PARIS TAMIL
ரஜினியை பின்தொடரும் சிவகார்த்திகேயன்

 தன்னுடைய நண்பர் பெயரில் தொடங்கப்பட்ட '24 ஏஎம் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 11ஆம் தேதி துவங்கி, தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் சேரி போன்றதொரு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 
இந்த ஷெட்யூலைத் தொடர்ந்து வேலைக்காரன் படத்தின் அடுத்த ஷெட்யூல் மலேசியாவில் மார்ச் இறுதியில் துவங்கவிருக்கிறது. சுமார் 35 நாட்கள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் வேலைக்காரன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. அங்குள்ள தொழிற்சாலைப் பகுதிகளில் இப்படத்திற்கான முக்கியமான சில காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.
 
'வேலைக்காரன்' படக்குழுவினர் படப்பிடிப்புக்காக விரைவில் மலேசியா செல்லவிருக்கிறது. ரஜினி நடித்த கபாலி படத்தின் படப்பிடிப்பை மலேஷியாவில் நடத்தியபோது அங்குள்ள தமிழ் மக்கள் ரஜினிக்கு எழுச்சியான வரவேற்பைக் கொடுத்தார்கள். அதன் காரணமாக கபாலி படம் மலாய் மொழியிலும் டப் செய்யப்பட்டது. இதேப்போன்று, வேலைக்காரன் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை மலேஷியாவில் படமாக்க முடிவு செய்துள்ளனராம். 

மூலக்கதை