தனுஷ் மீது புகார் கூறிய பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷ் மீது புகார் கூறிய பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

சென்னை: தனஷ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ள பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

இரவு 1 மணி வாக்கில் நடந்த பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் ஏதோ விளையாட அது வினையாகிவிட்டது. தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தி கையில் ரத்தம் கட்ட வைத்துவிட்டதாக சுசித்ரா ட்விட்டரில் பரபர புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் சாட்சியாக ரத்தம் கட்டிய தனது கையை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

சுசித்ரா தனுஷ் மீது கூறிய புகாரால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலரோ சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தனுஷ் மீது புகார் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

Such a kind person https://t.co/pHxs1OHRj4

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என ரசிகர் ஒருவர் ட்வீட்டியதற்கு பதில் அளித்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் சுசி.

I'm quite okay D might need those meds though https://t.co/nlVau7b8kC

நான் நலமாக இருக்கிறேன். அந்த மருந்துகள் மட்டும் தேவைப்படுகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சுசித்ரா.

This is the ultimate truth. I was attacked and everyone was told to not help. Thanks bro https://t.co/rPscHTvQ2u

நான் தாக்கப்பட்டேன். எனக்கு யாரும் உதவக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது என்று தான் காயம் அடைந்தது குறித்து தெரிவித்துள்ளார் சுசி.

மூலக்கதை