முருகதாஸ் படத்திற்கு முன்பு விஜய்யை இயக்கப் போவது ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
முருகதாஸ் படத்திற்கு முன்பு விஜய்யை இயக்கப் போவது ...

விஜய்யின் 61 -வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். 62 -வது படத்தை முருகதாஸ் இயக்குவார் என்பதே செய்தியாக இருந்தது.

இந்த தெளிந்த குட்டையை தெளிவாக குழப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்எஸ் தமன்.

  இவர் தனது இணைய பக்கத்தில், விரைவில் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  அட்லி படத்துக்கு இசையமைப்பது ஏ. ஆர். ரஹ்மான்.

முருகதாஸ் படத்துக்கு அனிருத்.

அப்படியெனில் முருகதாஸ் படத்துக்கு  முன் வேறொரு படத்தில் விஜய் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை தமனின் குறிப்பு எழுப்பியுள்ளது.   விஜய்யை இயக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ?

.

மூலக்கதை