இந்தியர்களுக்காக ஆதார் எண் இணைக்கப்பட்ட ஸ்கைப் அப்ளிகேசன்: மைக்ரோசாப்ட் அறிமுகம்

தினகரன்  தினகரன்

மும்பை: இந்தியர்களுக்காக பிரத்யேக ஸ்கைப் அப்ளிகேசனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவன நிகழ்ச்சியில் அதன் முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா இந்த அப்ளிகேசன்களை அறிமுகம் செய்து வைத்தார். குறைந்த இணைய வேகத்திலும் வீடியோ அழைப்புகள் செய்ய ஸ்கைப் அப்ளிகேசனின் லைட் வெர்சனை நாதெள்ளா அறிமுகம் செய்தார். இது இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஆதார் எண் மூலம் பயனர் விவரம் சரிபார்க்கும் வசதியும் இந்த அப்ளிகேசனில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை