மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் - 188வது வட்ட திமுக முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்  188வது வட்ட திமுக முடிவு

ஆலந்தூர்- சென்னை மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்ட அவைத்தலைவர் டி. அசோக் தலைமை தாங்கினார்.

வட்ட நிர்வாகிகள காசி, தங்கம், சே. சிந்தன், பிரேம், விஜயன் முன்னிலை வகித்தனர். ஜி. வி. ரகு வரவேற்று பேசினார்.

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி அவைத்தலைவர் எம். பி. அரிகிருஷ்ணன், வட்ட செயலாளர் சி. செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மார்ச் 1-ம் தேதி திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வார்டு முழுவதும் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது. 12-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி, மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் உட்பட 5 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது.

3,065 பேருக்கு அறுசுவை உணவு வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி உமாமகேஸ்வரன், ம. சேது, ஜி,சுரேஷ், ஆறுமுகம், மோகன், இளங்கோவன், இ,ரா,பாஸ்கர், மாற்கு, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை