கபாலியில் நடிக்க மறுத்த வித்யாபாலனை ரஜினியுடன் நடிக்க வைக்க முயற்சி - கால்ஷீட் பிரச்னை குறுக்கீடால் தாமதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கபாலியில் நடிக்க மறுத்த வித்யாபாலனை ரஜினியுடன் நடிக்க வைக்க முயற்சி  கால்ஷீட் பிரச்னை குறுக்கீடால் தாமதம்

தமிழ் படங்களில் நடிக்க பலமுறை அழைப்புவிடுத்தும் அதை ஏற்காமல் மவுனம் காத்து வரும் வித்யாபாலன் இந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்தபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கபாலி படம் உருவானபோது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க அவரிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர் பா. ரஞ்சித். ஏற்கவில்லை.

பிறகு ராதிகா ஆப்தே நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி தற்போது நடிக்கும் 2. 0 படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதால் அடுத்து பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் ரஜினி.



இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். ரஜினியின் புதியபட ஸ்கிரிப்ட் தயாரிப்பு பணியில் மும்முரம் காட்டி வந்த ரஞ்சித், தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணியை தொடங்கி இருக்கிறார்.

கபாலி படத்தில் ஜோடி சேர்க்க முடியாமல்போன வித்யாபாலனை இதில் ஜோடி சேர்க்க தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் மும்பை சென்று வித்யாவை சந்தித்த ரஞ்சித், அவரிடம் கதை கூறி ஓ. கே.

வாங்கி இருக்கிறார். மீண்டும் கால்ஷீட் பிரச்னை குறுக்கே நிற்பதாக தெரிகிறது.

அதனை அட்ஜெஸ்ட் செய்து நடிப்பதுபற்றி தெரிவிப்பதாக வித்யாபாலன் கூறி உள்ளார். கால்ஷீட் சிக்கல் தீர்ந்தபிறகே முறைப்படியான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.


.

மூலக்கதை