ட்ரம்பின் புதிய அதிரடி தடைச் சட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ட்ரம்பின் புதிய அதிரடி தடைச் சட்டம்!

 ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய விசா தடை சட்டத்தால் அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
 
இதனால் அமெரிக்காவில் பெரும் போராட்டம் ஏற்பட்டது. ட்ரம்பிற்கு எதிராக பல நாடுகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அதன் பின் ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்தது.
 
இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று திருத்தம் செய்யப்பட்ட புதிய விசா தடை உத்தரவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ஏற்கனவே, அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் ஏதாவது சிறிய குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, எல்லை தாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
 
இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இது அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது நடத்தப்பட உள்ள மறைமுக தாக்குதல் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை