கிராம பள்ளி ஆசிரியர் நிஜகதை படமாகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிராம பள்ளி ஆசிரியர் நிஜகதை படமாகிறது

பேய், கிரைம் என படங்கள் வரிசைகட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளி நினைவுகளை மீட்டுத்தரும் படமாக உருவாகிறது ‘பள்ளி பருவத்திலே’. வாசுதேவ் பாஸ்கர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே, மறுபடியும் ஒரு காதல் படம் இயக்கியவர். புதியபடம் பற்றி அவர் கூறியது: தஞ்சை ஆம்பளாபட்டு கிராமத்தில் நான் படித்த பள்ளியில் நடந்த நிஜ சம்பவங்களை மையமாக கொண்ட கதை.

இங்கு படித்தவர்கள் இன்று பெரிய உத்யோகத்தில் இருக்கின்றனர். அவர்கள் உருவாக காரணமாக இருந்த ஆசிரியர் சாரங்கன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தவேடத்தை கே. எஸ். ரவிகுமார் ஏற்கிறார். இசை அமைப்பாளர் சிற்பி மகன் நந்தன்ராம் நாயகனாகவும், வெண்பா நாயகியாகவும் அறிமுகமாகின்றனர்.

ஊர்வசி, தம்பிராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வினோத்குமார் ஒளிப்பதிவு.

விஜய் நாராயணன் இசை. டி. வேலு தயாரிக்கிறார்.

விவசாய தொழிலை காக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 100 பசு மாடுகள் தானமாக தர உள்ளோம்.


.

மூலக்கதை