நடுவராக மாறிய சோனாக்ஷி சின்ஹா

தினமலர்  தினமலர்
நடுவராக மாறிய சோனாக்ஷி சின்ஹா

தென்னிந்தியா மட்டுமல்லாது வட இந்திய சேனல்களிலும் டான்ஸ் ஷோ நிகழ்ச்சி பிரபலமானது. பிரபல ஸ்டார் தொலைக்காட்சியில் ‛நச் பாலியே' என்ற டான்ஸ் நிகழ்ச்சி பிரபலம். தற்போது இதன் 8-வது சீசன் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன அமைப்பாளர்கள் சரோஜ் கான் மற்றும் டெரென்ஸ் லீவிஸ் உள்ள நிலையில் இன்னொரு நடுவராக நடிகை கஜோல் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது சோனாக்ஷி சின்ஹா நடுவராக பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

மூலக்கதை