சல்மான் படத்தில் சித்தார்த் மல்கோத்ரா.?

தினமலர்  தினமலர்
சல்மான் படத்தில் சித்தார்த் மல்கோத்ரா.?

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோக்களில் சித்தார்த் மல்கோத்ராவும் ஒருவர். சில தினங்களுக்கு முன் சித்தார்த் மல்கோத்ரா, நடிகர் சல்மான்கான் படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சித்தார்த்திடம் சல்மானின் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு சித்தார்த் பதிலளித்தாவது... "சல்மான்கான் படத்தில் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. நான், தற்போது இத்திபா ரீ-மேக் படத்தில் நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் ஆரம்பமானது'' என்று கூறியுள்ளார்.

இத்திபா தவிர சித்தார்த் மல்கோத்ரா ‛ரீலோடட்' என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

மூலக்கதை