மார்ச் 9-ல் ஆரம்பமாகும் ‛கோல்மால் அகைன்'

தினமலர்  தினமலர்
மார்ச் 9ல் ஆரம்பமாகும் ‛கோல்மால் அகைன்

பாலிவுட்டின் பிரபலமான கமர்ஷியல் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இவரது, இயக்கத்தில் வெளியான கோல்மால் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இதன் நான்காம் பாகம் தற்போது ‛கோல்மால் அகைன்' என்ற பெயரில் உருவாகிறது. இதில், அஜய் தேவ்கன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் அர்ஷத் வர்சி, ஸ்ரேயாஸ் தல்படே, குணால் கேமு, தபு, பரினீதி சோப்ரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 9ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. கோல்மால் அகைன் படத்திற்கு முந்தைய பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனால் படப்பிடிப்பை மார்ச் 9-ம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக கோல்மால் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‛கோல்மால் அகைன்' படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

மூலக்கதை