பஹத் பாசிலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் மம்தா..!

தினமலர்  தினமலர்
பஹத் பாசிலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் மம்தா..!

கடந்த 2014ல் மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் தான் மம்முட்டி நடித்த 'முன்னறியிப்பு'. படத்தில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியாக, மிகவும் மாறுபட்ட நடிப்பால் மிரட்டியிருந்தார் மம்முட்டி. சொல்லப்போனால் படத்தில் அவர் பேசும் மொத்த வசனமே இரண்டு பக்கங்களுக்குள் அடங்கிவிடும்.. முகபாவங்களாலேயே படம் முழுதும் நம்மை வசியப்படுத்தியிருப்பார் மம்முட்டி.. இந்தப்படத்தை ஆர்ட் பிலிம் என்று சொல்லிவிடாத வகையில் அதேசமயம் அதன் இயல்பு கெடாமல் கமர்ஷியல் த்ரில்லர் படமாகவே இயக்கியிருந்தார் இயக்குனர் வேணு..

அதன்பின் அடுத்த படத்தை உடனே அறிவிக்காமல் மூன்று வருடங்கள் இடைவெளி விட்டிருந்த இயக்குனர் தனது புதிய படத்திற்கு இப்போது தயாராகிவிட்டார்.. இந்தப்படத்தில் கதாநாயகனாக பஹத் பாசில் நடிக்க, அவரது ஜோடியாக முதன்முறையாக அவருடன் இணைந்து நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ். இந்தப்படமும் த்ரில்லர் வகையை சேர்ந்ததுதானாம்.. முழுக்க முழுக்க காட்டுப்பகுதியிலேயே எடுக்கப்படும் இந்தப்படத்தில் இயற்கையான சப்தங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் வேணு.

மூலக்கதை