ஆதாரை பயன்படுத்தி கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆதாரை பயன்படுத்தி கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம்

புதுடெல்லி- ஆதார் அடையாள கார்டுகளை பயன்படுத்திக் கொள்ள பல்வேறு அமெரிக்க தனியார் நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் குடிமக்களுக்கு பொதுவான அடையாளமாக ஆதார் அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இதை பயன்படுத்தி பல்வேறு அரசு மானிய உதவிகளையும் வங்கி கணக்கில் நேரடியாக பெறலாம். பல்வேறு நலத்திட்டங்களிலும் முறைகேடுகளை தடுக்க, அவற்றுக்கு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த ஆதார் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் பலவும் முன்வந்துள்ளன. செல்போன் சேவை நிறுவனங்களும், புதிய சிம்கார்டு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதாரை பயன்படுத்துகின்றன.

தற்போது, இந்தியாவில் பல்வேறு தொழில்களை செய்து வரும் அமெரிக்க நிறுவனங்களும் தங்களின் சேவைகளில் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆதார் மூலம் மானியம் வழங்குவதை மத்திய அரசு மேலும் பல்வேறு திட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அமெரிக்க நிறுவனங்கள் கருதுகின்றன.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் தங்களது குறிப்பிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதாரை முக்கிய ஆவணமாக பயன்படுத்த விருப்பம் தெரிவித்திருக்கின்றன. ைமக்ரோசாப்ட் விரைவில் ஸ்கைப் சேவைக்கு ஆதாரை பயன்படுத்த உள்ளது.

மேலும், பல்வேறு நிறுவன தலைவர்கள் ஆதார் சேவை தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்’’ என்றனர்.

.

மூலக்கதை