ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு - கோவை வரும் மோடிக்கு விவசாயிகள் கருப்பு கொடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு  கோவை வரும் மோடிக்கு விவசாயிகள் கருப்பு கொடி

திருச்சி- திருச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் கூறியதாவது: காவிரியின் குறுக்கே ராசி மணல், மேகதாது, பவானி, சிறுவாணி குறுக்கே நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாகவும், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கர்நாடக, கேரள அரசுகள் அணை கட்ட முயற்சிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம்.

முதலில் ஒப்புக்கொண்ட மத்திய அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தற்போது காலம் தாழ்த்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடலூரில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை எரிவாயு எடுக்கும் திட்டம் உள்ளது.

இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறுவதோடு, பேராபத்தை ஏற்படுத்தும். ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 24ம் தேதி(நாளை மறுநாள்) கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதில்,அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு பி. ஆர். பாண்டியன் கூறினார்.

.

மூலக்கதை