வறட்சி நிவாரணம் குறைவு - விவசாயிகள் கடும் அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வறட்சி நிவாரணம் குறைவு  விவசாயிகள் கடும் அதிருப்தி

திருச்சி- விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவி தொகை ரூ. 2,247 கோடி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் உரிய நேரத்தில் கிடைக்கும் என்பது சந்தேகமாக உள்ளது.

விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் வறட்சி நிவாரணம் அறிவிக்க வில்லை என விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர். த. மா. கா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கூறுகையில், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,450 வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் கேட்டுள்ளோம். வறட்சியாலும், கடன் சுமை யாலும் மீள முடியாத விவசாயிகள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை உற்பத்தி கடுமையாக பாதிக் கப்பட் டுள்ளது.

இதுவரையிலும் முறையாக கணக்கெடுக்கப்பட வில்லை. உரிய நிவாரணமும் அறி விக்கப்பட வில்லை.

ஏற்கனவே 2013-14ல் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வில்லை. இந்த அறிவிப்பு ஏமாற்று அறிவிப்பாகும் என்றார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறுகையில், ஏக்கருக்கு ரூ. 5,450 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏக்கருக்கு ரூ. 5,645அறிவிக்கப்பட்டது.

ஏக்கருக்கு ரூ. 30ஆயிரம் வழங்க வேண்டும்.

கரும்புக்கு ரூ. 40ஆயிரமும், வாழைக்கு ரூ. 50ஆயிரமும், மானாவாரி பயிருக்கு ரூ. 15ஆயிரமும் விவசாயிகள் கேட்டு இருந்தனர். ஆனால் இது பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை.

மொத்தத்தில் இந்த அறிவிப்பு ஏமாற்று வேலையும் மட்டுமல்லாமல் வெட்டு அறிவிப்பாக உள்ளது. கடும் வறட்சியால் 270 விவசாயிகள் இறந்துள்ளனர்.

அவர்களுக்கு எந்தவித நிவாரணமும் பற்றி அறிவிக்க வில்லை.

விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

.

மூலக்கதை