10 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வாட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வாட்டும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி- இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் வறுத்தெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும் இப்போதே கடும் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படத் துவங்கியுள்ளது.

சென்னையில் ஏரிகள் வறண்டு, பல பகுதிகளில் மெட்ரோ வாட்டர் குழாய்களில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டிருக்கிறது. வறட்சி காரணமாக வன விலங்குகள் ஊர்களுக்குள் புகுந்து விடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.



பிப்ரவரி முடிவதற்கு முன்பாகவே வட மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி,  உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் 93 டிகிரியை தொட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன், எந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது வெயில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வெயிலின் உக்கிரம் அதிகமாக காணப்படுகிறது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில், டெல்லி உள்பட வடமாநிலங்கள் மட்டுமின்றி, தென் மாநிலங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை வெயில் வறுத்தெடுக்கும் என்றும், வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை