500 பேருக்கு மட்டுமே அழைப்பு; விருந்தில் 7 வகை உணவுதான் திருமண விழாக்களுக்கு காஷ்மீரில் புதிய கட்டுப்பாடு - ஏப்ரல் முதல் அரசு உத்தரவு அமல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
500 பேருக்கு மட்டுமே அழைப்பு; விருந்தில் 7 வகை உணவுதான் திருமண விழாக்களுக்கு காஷ்மீரில் புதிய கட்டுப்பாடு  ஏப்ரல் முதல் அரசு உத்தரவு அமல்

ஸ்ரீநகர்- காஷ்மீரில் முதல்வர் மெகபூபா தலைமையிலான பிடிபி-பாஜ கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் திருமண விழாக்களில் ஆடம்பரங்கள் அதிகமாக உள்ளதாகவும், ஏராளமான உணவு பொருட்கள் விரயமாக்கப்படுவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, பெரும் செல்வந்தர் வீட்டு திருமணமாக இருந்தாலும் கூட, அதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென அரசு முடிவெத்தது. இதையடுத்து, உணவு சப்ளை மற்றும் நுகர்வோர் துறை சார்பில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒருவரின் மகள் திருமணம் என்றால், அதிகபட்சம் 500 பேருக்குத்தான் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். மகன் திருமணம் என்றால் 400 பேரைத்தான் அழைக்க வேண்டும்.

திருமண அழைப்பிதழுடன் பாதாம், முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளை கொடுக்க தடை விதிக்கப்படுகிறது.

திருமண விருந்தில் சைவ, அசைவ உணவு எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் ஏழு ஐயிட்டங்கள்தான் இருக்க வேண்டும்.

மேலும், திருமண விழாக்களில் ஒலி பெருக்கி, பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதே போல், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சிறிய விழாக்களுக்கு அதிகபட்சம் 100 பேரைத்தான் அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் அரசின் இந்த அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

.

மூலக்கதை