தீவிரவாதிகள் தாக்குதலில் துணை முதல்வர் தப்பினார் - மணிப்பூரில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாதிகள் தாக்குதலில் துணை முதல்வர் தப்பினார்  மணிப்பூரில் பரபரப்பு

இம்பால்- மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து துணை முதல்வர் தப்பினார். மணிப்பூரில் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு சட்டமன்ற தேர்தல் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்த இபோபி சிங் அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த சூழலில் அங்கு நாகா தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் நேற்று இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

இதில் இம்பாலில் இருந்து கவுபும் தொகுதிக்கு துணை முதல்வர் கைகங்காம் சென்றார்.

மலைப்பாதையில் நோனி - விஷ்ணுப்பூர் சாலையில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் காரணமாக துணை முதல்வர் கைகங்காம் மற்றும் அவரது குழுவினர் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் தவித்தனர்.

அதன்பின், துணை முதல்வர் அதிர்ஷ்டவசமாக தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். அவரை இம்பாலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனார்.

அதே போல் விஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கோங்கியாங் என்ற கிராமத்தில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேரடியாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஜெனீஷ் என்ற போலீஸ்காரர் காயமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை