திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடியில் தங்க நகைகள் காணிக்கை: தெலுங்கானா அரசு சார்பில் சந்திரசேகர ராவ் வழங்கினார்

தினகரன்  தினகரன்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தெலுங்கானா அரசு சார்பில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கியுள்ளார். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினர், அமைச்சர்கள், தெலுங்கானா இந்து அறநிலை துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் 14 கிலோவில் ஆரம் ஒன்றும் அதோடு கழுத்தணி ஒன்றும் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 4 கிலோ எடையில் கண்ட ஆபரணம் மலையப்ப சுவாமிக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. நகைகளை தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சம்பசிவராவ், அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தனி தெலுங்கானா மாநிலம் ஏற்பட்டால் திருப்பதி ஏழுமலையான், திருச்சானூர் பத்மாவதி, விஜயவாடா கனகதுர்கையம்மன், தெலுங்கானாவில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் வீரபத்ரசாமிக்கு காணிக்கை வழங்குவதாக சந்திரசேகர ராவ் வேண்டிக்கொணடார். அதன்படி 2016-ம் ஆண்டு தனி தெலுங்கானா ஏற்பட்டு அம்மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் தனது வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்.

மூலக்கதை