சீனாவில் பனிச்சிற்ப திருவிழாவில் சாகசம் செய்து மக்களை வியக்க வைத்த ஜெர்மனி வீரர்

தினகரன்  தினகரன்

பெய்ஜிங்: சீனாவில் பனிக்கட்டிகளால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களுக்கு நடுவே கை பிடிமானமின்றி தாவிக்குதித்தபடியே வலம்  வந்த வீரர் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். ஹற்பின் நகரில் தொடங்கிய பனிச்சிற்ப திருவிழாவில் தான் இந்த சாகசம் அரங்கேறியது. மாளிகைகள், சீன வரலாற்று நாயர்களின் உருவங்கள், இயற்கையின் அழகை கண்முன் நிறுத்தும் வடிவங்கள் என பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. இதில் ஜேஸன் பால் என ஜேர்மனி தடகள வீரர் கைகளில் எவ்வித உபகரணங்கள் இன்றி தாவிக்குதித்தபடி பனிச்சிற்பங்களை கடந்து சென்ற காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 25 டிகிரி செல்சியஸுகும் குறைவான வெப்ப நிலையில் ஜேஸன் பால் நிகழ்த்திய சாகசங்களுக்கு கை கொடுத்தது அவரது பிரத்தேக ஷூ மட்டுமே. அந்த ஷூவின் அடியே தைக்கப்பட்டுள்ள ஆணிகள், சாகசத்திற்கு நடுவே அவரது உடலை சமநிலை படுத்தியது.  

மூலக்கதை